சூர்யா நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையன்று வெளியாக உள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், ரம்யா கிருஷ்ணன், செந்தில், தம்பி ராமையா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், இப்படத்திற்கு எதிராக அதிமுக நிர்வாகி ஒருவர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெறும் “சொடக்கு மேல சொடக்கு போடுது..” என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரவியுள்ள நிலையில், இப்பாடலில் இடம்பெற்றுள்ள “விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது...அதிகாரத் திமிர...பணக்கார பவர...” என்ற வரிகளை எதிர்த்து அதிமுக நிர்வாகி சதீஷ் குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த வார்த்தைகளை பயன்படுத்தி அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் மீம்ஸ்கள் உருவாக்கி, அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும், அதனால் இந்த பாடலை தடை செய்ய வேண்டும், என்றும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பாடலை எழுதியவர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...