Latest News :

கானா பாடலை உலகம் முழுவதும் பரப்பும் பா.ரஞ்சித்!
Saturday January-06 2018

‘அட்ட கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது ரஜினியை வைத்து ‘காலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் கானா பாடலை உலகம் முழுவதும் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

இதற்காக, தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்’ என்ற தலைப்பில் சென்னையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளார். இன்று (ஜன.06) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ பெய்ன் பள்ளியில் நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சியில் ‘கானா-ராப்-ராக்’ ஆகிய மூன்றையும் கலந்த இசை நிகழ்வு நடைபெற உள்ளது.

 

இந்த இசை நிகழ்ச்சியில் பங்குபெறும் இசைக்குழு மற்றும் இசைக் கலைகன்ர்களின் அறிமுகக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி வைத்த பா.ரஞ்சித், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சி தான் இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி. இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.

 

மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.

 

கானா என்பது மக்களின் இசை, மூடப் பழக்கவழக்கங்களை எதிர்க்கிற இசை. அது போல தான் ராப் இசையும். அது கறுப்பர்களின் வாழ்வியலையும், அவர்களின் போராட்டங்களையும் உலகிற்கு எடுத்துச் சொன்னது. அதனடிப்படையில் பார்த்தால் ராப் இசையும், கானாவும் வேறு வேறில்லை. இரண்டுமே மக்களின் வலியை, துயரத்தை பேசக் கூடியவை. இரண்டையுமே இணைத்து இந்த “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்” இசை நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.

 

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பாடல்கள் பாடப்பட இருக்கிறது. எல்லா விதமான உணர்வுகளோடும் கூடிய பாடல்களாக அவை இருக்கும். இந்நிகழ்ச்சி, தொல்குடி மக்களின் இசையை உலகிற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாகும். இன்னும் தமிழகத்தின் மூலைகளில் பரவிக் கிடக்கிற எளிய மக்களின் அத்தனை இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும்  யோசனையும் இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

 

மிகப்பெரிய திறந்தவெளி அரங்க இசை நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்விற்கு கட்டணம் ஏதும் இல்லை. அனைவருக்கும் அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

1724

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery