தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நடிகர்கள் என்றால் விஜய் மற்றும் அஜித் தான், என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், தற்போது இவர்களை சிவகார்த்திகேயன் பின்னுக்கு தள்ளிய தகவல் வெளியாகியுள்ளது.
படம் எப்படி இருந்தாலும், வெளியான ஒரு வாரம் நல்ல வசூல் பார்க்கும் படங்கள் என்றால் அது விஜய், அஜித் ஆகியோரது படங்களாக மட்டும் இருந்த நிலையில், இதில் சிவகார்த்திகேயனும் இடம் பிடித்தார். இவரது படங்களுக்கு நல்ல ஓபனிங் இருந்து வந்தது.
இந்த நிலையில், ’வேலைக்காரன்’ படத்தின் சென்னை வசூல் விஜய் மற்றும் அஜித் படங்களின் வசூலை முந்திவிட்டதாக கூறப்படுகிறது. ஆம், விஜயின் ‘பைரவா’ சென்னையில் ரூ.7 கோடியையும், அஜித்தின் ‘வேதாளம்’ ரூ.6.9 கோடியையும் வசூல் செய்திருந்தது.
ஆனால், சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ சென்னையில் மட்டும் ரூ.7.8 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம், விஜய் மற்றும் அஜித்தை பின்னுக்கு தள்ளியுள்ள சிவகார்த்திகேயன், விரைவில் ஆல் டைம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதல் 5 இடத்திற்குள் வந்துவிடுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...