கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற இசையமைப்பாளர் தஷி, திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் பிஸியாக இருந்தாலும், பக்தி ஆல்பங்களுக்கு இசையமைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி, புதிதாக இரண்டு பக்தி இசை ஆல்பங்களை இசையமைத்து தயாரித்துள்ளார்.
‘இசையின் உயிரும் நீயே உயிரின் இசையும் நீயே’ என்ற தலைப்பில் சரஸ்வதி பற்றிய இசை ஆல்பமாகவும், ‘கதிர்காம வேலவா’ என்ற தலைப்பில் முருகன் பக்தி பாடல்கள் கொண்ட இசை ஆல்பமாகவும் உருவாகியுள்ள இந்த இரண்டு இசை ஆல்பங்களையும், திரைப்பட தயாரிப்பாளர் டி.கே.சந்திரன் வெளியிட, மஹாலிங்க ஈஸ்வரர் தியான சபை குருஜி மனோகரன் பெற்றுக் கொண்டார்.
செட்டிநாட் வித்யாசர்ம பள்ளியின் தமிழ் ஆசியர் கவிஞர் சுரா, கிராம நிர்வாக அலுவலரும் கவிஞருமான அசோகன், திரைப்பட பாடலாசிரியர் தமிழரசன், காஞ்சி தென்றலவன், எழில் வேந்தன் ஆகியோர் வரிகளில் உருவான 12 பாடல்கள் இந்த இரண்டு ஆல்பங்களில் இடம்பெற்றுள்ளது. இந்த 12 பாடல்களையும் அறிமுக பாடகர்கள் பாடியுள்ளார்கள் என்பது இந்த ஆல்பத்தின் மற்றொரு சிறப்பாகும்.
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...
பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி...