’இறுதி சுற்று’, ‘விக்ரம் வேதா’ என்று தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள மாதவன், கதை தேர்வில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி மாதவன் அடுத்து எந்த மாதிரியான படத்தில் நடிப்பார், என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் சற்குணம் இயக்கும் படத்தில் மாதவன் அடுத்து நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ’ஆரஞ்சு மிட்டாய்’, ‘றெக்க’ ஆகிய படங்களை தயாரித்த காமன்மேன் கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை சற்குணம் இயக்குவதோடு, இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பொருப்பையும் ஏற்றுள்ளார்.
பிரம்மாண்டமான படமாக உருவாக உள்ள இப்படம் காடுகளில் நடக்கும் கதையை மையப்படுத்தியதாகும். தாய்லாந்து, மங்கோலியா, தஜிகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ’ஹாரி பார்ட்டர்’, ‘ட்ராகுலா அண்டோல்டு’ உள்ளிட்ட பல படங்களுகு ஆக்ஷன் வடிவமைத்த ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் க்ரே பரிட்ஜ் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
ஆக்ஷன் அட்வென்சர் படமாக உருவாகும் இப்படத்தை குழந்தைகளுக்கான படமாகவும், அதே சமயம் குடும்பத்தோடு பார்க்ககூடிய பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும், என்றார் இயக்குநர் சற்குணம்.
இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்தின் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...