Latest News :

அரசியலில் குதித்த ரஜினி - சரவணா ஸ்டோர்ஸ் அதிபரின் பலே திட்டம்!
Sunday January-07 2018

2018 ஆம் ஆண்டில் தமிழகம் பல அதிரடி நிகழ்வுகளை சந்திக்க தயாரகிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று ரஜினிகாந்தின் அரசியல் எண்ட்ரி. டிசம்பர் 31 ஆம் தேதியே தனது அரசியல் எண்ட்ரி குறித்து ரஜினிகாந்த் அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சியில் பல நடிகர்களும், தொழிலதிபர்களும் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

 

இதற்கிடையே, ”ரஜினிக்கு போட்டி இவர் தான்” நெட்டிசன்கள் சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் அருளை கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிட்டு வந்தனர். அவரும் ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் விளம்பர படங்களில் ஆட்டம் போட்டு, தமிழ் ஹீரோக்களை வெறுப்பேற்றினார்.

 

இதையடுத்து அவரிடம் சினிமாவில் நடிக்க போகிறீர்களா? என்று கேட்டதற்கு, “அப்படி ஒரு எண்ணமே எனக்கு இல்லை” என்று கூறி வந்தார்.

 

இந்த நிலையில், மலேசியால் நடைபெற்ற நட்சத்திர கலை விழாவுக்கு ஸ்பான்சர் செய்த சரவணா ஸ்டோர்ஸ் அருள், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், ரஜினி பக்கத்தில் அமர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர், மலேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சினிமாவில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு, “நல்ல திரைக்கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்” என்று பதில் அளித்தார்.

 

ஆக, இந்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியலில் குதித்து தமிழக அரசியலில் அதிரடி காட்டப்போவதை போல, சரவணா ஸ்டோர் அருள் சினிமாவில் குதித்து கோலிவுட்டில் அதிரடி காட்டிவிடுவார் போலிருக்கே.

 

நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ் நிஜமாகிவிடுமோ!

Related News

1738

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery