ரஜினி, கமல உள்ளிட்ட சுமார் 340 நடிகர் நடிகைகள் நேற்று மலேசியாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒட்டு மொத்த கோடம்பாக்கமே பங்குபெற்ற இதில் கிரிக்கெட், கால்பந்து என்று நடிகர்கள் பலவிதமாக மக்களை எண்டர்டெயின்மெண்ட் செய்தனர்.
இதற்கிடையே, கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்ட நடிகர் ஆரி கால் உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நடிகர் ஜெயம் ரவியும் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரித்ததில், உடல் நிலை சரியில்லாமல் மலேசியாவுக்கு சென்ற ஜெயம் ரவி கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டாராம்.
அதனால், அவரை மலேசியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். விரைவில் குணமாகி சென்னைக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...