’ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி ஸ்கொயர்’ என்று மூன்று படங்களில் விக்ரம் நடித்து வருகிறார். இதில் ‘ஸ்கெட்ச்’ வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. மற்ற இரண்டு படங்களும் முடியும் தருவாயில் உள்ளது.
அடுத்ததாக ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கும் விக்ரம், அடுத்ததாக கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆர்.எஸ்.விமல் இயக்கும் இப்படத்திற்கு ‘மஹாவீர் கர்ணா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலு உருவாகும் இப்படத்தை ரூ.300 கோடி பட்ஜெட்டில், நியூயார்க்கை சேர்ந்த யுனைடெட் கிங்டம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. படத்தை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்தி பதிப்பிற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...