கடந்த 5,6 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 340 நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்ட இந்த விழாவில் ரஜினி மற்றும் கமல் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
கலை நிகழ்ச்சியோடு நடிகர்கள் விளையாடிய கிரிக்கெட், கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய ரஜினிகாந்த், தனது முதல் காதல் குறித்த ரகசியத்தை கூறினார்.
”பள்ளி படிக்கும் போது இளம் வயதில், நானும் ஒருத்தியை காதலித்தேன். அனைவரது வாழ்விலும் முதல் காதல் வரும். ஆனால், அதனை யாராலும் மறக்க முடியாது. ஆனால், என்னால் என்னுடைய காதலியின் இதயத்தை வெல்ல முடியவில்லை” என்றார். இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த காதலியின் பெயரை கேட்க, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...