Latest News :

மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்தும் ரஜினிகாந்த்!
Monday January-08 2018

விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தனது கட்சியின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில் நேற்று நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர்.

 

பின்னர் நிருபர்களிடம் பேசிய லாரன்ஸ், “நான் 12 வயதில் இருந்து ரஜினியின் தீவிர ரசிகனாக உள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அவரது ஆன்மீக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைபடுத்துவது இல்லை. அனைத்து, சாதி, மதத்தை ஒருங்கிணைப்பது தான் ஆன்மீக அரசியல். அதை தவறாக புரிந்து கொண்டு அதை விமர்சனம் செய்கிறார்கள்.

 

மதுரை ஒரு ராசியன மண். எனவே இந்த மண்ணில் இருந்து அரசியல் பிரவேசத்தை ரஜினி தொடங்குவார் என கருதுகிறோம். இதற்காக மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை அறிமுகம் செய்யப்படும். இந்த மாநாடு விரைவில் நடைபெறும்.

 

கட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்ற ஆசை இல்லை. ரஜினிகாந்துக்கு காவலனாக இருக்க ஆசைப்படுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

1747

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery