Latest News :

கேங்ஸ்டராக மிரள வைத்த குரு சோமசுந்தரம்!
Tuesday January-09 2018

அறிமுக இயக்குநர் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வஞ்சகர் உலகம்’. காதல் திரில்லட் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் பல புதுமுகங்களோடு, பல அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.

 

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் மனோஜ் பீதா, எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

படம் குறித்து கூறிய இயக்குநர் மனோஜ் பீதா, “இது ஒரு கேங்ஸ்டர் அம்சங்கள் கலந்த காதல் திரில்லர் படம். இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எனது நண்பர் விநாயக் தான் இப்படத்தின் கதையாசிரியர். 

 

'வஞ்சகர் உலகம்' படத்தின் கதை மற்றும் திரைக்கதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முற்றிலும்  ஒரு புது அனுபவமாக நிச்சயம் இருக்கும். படத்தின் ஒவ்வொரு நடிகரும் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளனர். குறிப்பாக குரு சோமசுந்தரத்தின் நடிப்பாற்றலை கண்டு வியந்தேன். ஒரு கேங்ஸ்டர் வேடத்தில் அவர்  இப்படத்தில் நடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் கையாண்டு அசத்திய விதம் நான் அவரிடம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு பிரமாதமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட 5-6 நிமிட கட்சியை ஒரே டேக்கில் ஓகே செய்து  எல்லோரையும் மிரளவைத்தார் அவர். அவரது அபார  நடிப்பாற்றலால் கதையில் நாங்கள் சில மாறுதல்களை செய்யவேண்டியிருந்தது. 

 

மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த ராட்ரிகோ தான் இப்படத்தில் ஒளிப்பதிவாளர். அவரது சிறந்த ஒளிப்பதிவு நிச்சயம் தமிழ் சினிமா உலகில் பேசப்படும். நடிகர் விசாகன் வணங்காமுடியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் இப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக நிச்சயமாக இருக்கும். எனக்கு மிகவும் திருப்தியும் சந்தோஷமும் அளிக்கும் வகையில் இப்படம் வந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடஜ்ஷன்ஸ் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

 

மஞ்சுளா பீதா தயாரித்துள்ள இப்படத்தில் புதுமுகம் சிபி ஹீரோவாகவும், அனிஷா அம்ப்ரோஸ், சாந்தினி தமிழரசன் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, ஏ.ராஜேஷ் கலையை நிர்மாணித்துள்ளார். ஸ்டன்னர் ஷாம் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

1753

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery