’சிலந்தி’, ’ரணதந்த்ரா’ படங்களைத் தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்கும் படம் ‘அருவா சண்ட’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது. புதுமுகம் ராஜா நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், ‘ஆடுகளம்’ நரேன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, மதுரை சுஜாதா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.
காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு தரண் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் சுரேஷ் கல்லேரி கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
கெளரவக் கொலைகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை இயக்குநர் அமீர் இன்று வெளியிட்டுள்ளார். மேலும், டீசரை பார்த்த அமீர், ”டீஸர் நன்றாக இருக்கிறது, படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்” என்று பாராட்டினார்.
ஒயிட் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...