தேர்தலில் போட்டியிடுவதற்காக சீட் கேட்ட நடிகையை அக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் அந்த நடிகையை நிர்வாணமாக நிற்க சொன்னதாக, வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார்.
இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு அழைத்து முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என 'லஞ்சம்' கேட்டிருக்கிறார்.
இது குறித்து கொழும்பில் இருந்து வெளியாகும் தி சண்டேலீடர் பத்திரிகைக்கு நடிகை மதுசா அளித்த பேட்டியில், “ராஜபக்சேவின் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்காக நான் பாடுபட்டிருக்கிறேன். உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததால் நாமும் போட்டியிடலாம் என முடிவெடுத்தேன்.
ஆனால் ராஜபக்சேவின் நண்பரோ என்னை நிர்வாணமாக நிற்க வேண்டும் என கூறினார். இந்த கொடுமையை மகிந்த ராஜபக்சேவிடமும் தெரிவித்தேன்.
மகிந்த ராஜபக்சேவோ எதனையுமே கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறினார். என்னை நிர்வாணமாக நிற்க சொன்ன நபர் மீது ராஜபக்சே எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...