Latest News :

அமிதாப் பச்சன் வீட்டில் இருந்து வெளியேறும் ஐஸ்வர்யா ராய்!
Wednesday January-10 2018

அமிதாப் பச்சனின் மகனும், முன்னணி பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராயை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

 

தற்போது இவர்கள், அமிதாப் பச்சனின் பங்களாவான ஜல்சாவில் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். இதற்கிடையே, மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக அவ்வபோது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், ஹீரோக்களுடன் மிக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகளில் நடிப்பது மாமியார் ஜெயா பச்சனுக்கு பிடிக்கவில்லை என்றும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அபிஷேக் பச்சனின் தங்கை ஸ்வேதாவுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையும் மோதல் ஏற்பட்டுள்ளதால். குடும்ப பிரச்சினை ரொம்ப முற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இதன் காரணமாக, ஐஸ்வர்யா ராய் அமிதாப் பச்சன் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்திக்கிறாராம். இதற்காக அவர் தனது கணவருடன் சேர்ந்து மும்பையில் ரூ.21 கோடியில் அபார்ட்மெண்ட் ஒன்றை வாங்கியுள்ளாராம். விரைவில் தனது கணவர் மகளுடன் இந்த வீட்டில் தனி குடித்தனம் செல்ல இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்தி வெளியாகியுள்ளன.

 

ஆனால், இதை மறுத்துள்ள அமிதாப் பச்சன் தரப்பினர். அபிஷேக் பச்சனுக்கு அம்மா, அப்பா என்றா உயிர், அவர் ஒரு காலத்திலும் தனது பெற்றோர்களை விட்டு பிரிய மாட்டார். அப்பார்ட்மெண்ட் வாங்கியது உண்மை தான். அது, முதலீட்டுக்காக வாங்கியதே தவிர தனி குடித்தனம் செல்ல அல்ல, என்று தெரிவித்துள்ளனர்.

Related News

1757

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery