ஜெயலலிதா மறைவு, கருணாநிதி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதோடு, பலருக்கு முதல்வர் ஆகும் ஆசையும் வந்திருக்கிறது. இதையடுத்து கமல், ரஜினி, விஷால் ஆகியோர் நேரடி அரசியலில் இறங்கியுள்ள நிலையில், தற்போது இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில், அதிமுக-வின் ஆதரவாளாரான கே.பாக்யராஜ் திடீரென்று திமுக-வுக்கு தனது ஆதரவை தெரிவித்தவர். சில ஆண்டுகளுக்கு பிறகு எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்ததோடு, அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருந்தார்.
இந்த நிலையில், நேரடி அரசியலில் தான் ஈடுபடப் போவதாக சமீபத்தில் அறிவித்த கே.பாக்யாஜ், அரசியலில் இறங்கினால் அதிமுக-வில் இணைவேன், என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி, இன்று சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் அவரின் பக்தனாக, கட்சியை வீழ்ச்சியடைய விடாமல் இருக்க தன்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...