விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வட சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வந்த மெட்ராஸ் மற்றும் மேயாத மான் ஆகிய படங்களுக்கு மத்தியில் விக்ரமின் இப்படம் வித்தியாசமான ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், தான் நடித்த படத்தை முதல் நாள் முதல் ஷோ சென்று பார்க்கும் விதமாக சென்னை வெற்றி திரையரங்கிற்கு அதிகாலையிலேயே வந்துள்ளார் சியான் விக்ரம்.
இன்று காலை 6 மணிக்கு ஒளிபரப்பான முதல் நாள் முதல் ஷோவை ரசிகர்களுடன் இணைந்து கண்டு களித்துள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...