Latest News :

எஸ்பி பிக்செல்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ‘கூட்டாளி’
Thursday August-10 2017

எஸ்பி பிக்செல்ஸ் சார்பாக எஸ். சுரேஷ் பாபு, பி. பெருமாள் சாமி இணைந்து, மிக பிரம்மாண்டமான பொருட்செலவில், பல பிரமிக்கதக்க காட்சி அமைப்புகளுடன் தயாரிப்பில் உள்ள ’கூட்டாளி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

 

சென்னையில் துவங்கி, பாண்டிச்சேரி, கடலூர், சிதம்பரம் என பல இடங்களில் பரபரப்பாகப் படப்பிடிப்பு நடைபெற்றி்ருக்கிறது.

 

துணை, இணை இயக்குநராகப் பல திரைப்படங்களில் பணியாற்றிய எஸ்.கே மதி, இத்திரைப்படத்தின் மூலம் கதை, திரைகதை, வசனம் எழுதி  இயக்குநராகிறார்.

 

முற்றிலும் புது முகங்களை வைத்து உருப்பெறும், இத்திரைப்படத்தில் சதீஷ் கதாநாயகனாகவும், கிரிஷா குரூப் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

 

இவர்களுடன் கல்யாண், அருள்தாஸ், கௌசல்யா உதயபானு மகேஸ்வரன், போஸ்டர் நந்தகுமார், அப்புக்குட்டி, கலையரசன், அன்புராஜ்,  ஆகியோரும் திரையை பகிர்ந்து கொள்கின்றனர்.

 

பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நால்வர் நண்பர்களாக, அவர்களோடு ஒரு பெண்ணும் தோழியாகிறார். வாழ்விலும் தொழிலிலும் ஒரு தோழியால் வரும் பிரச்சினைகளையும், அதனை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜனரஞ்சகமாகவும், விறுவிறுப்புடனும், படமாக்கி இருக்கிறார்கள். 

 

ஒளிபதிவாளர் சுரேஷ் நடராஜன்,  படத்தொகுப்பு பிரஷாந்த் தமிழ்மணி், நடனஅமைப்பு கல்யாண், ரமேஷ், மற்றும் கலை சிவக்குமார், சண்டைகாட்சி அமைப்பு ராம்போ விமல், தயாரிப்பு நிர்வாகம்.ஆர்.கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் இணைந்து இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்திருக்கிறார்.

Related News

177

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery