கடந்த தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கினாலும், அதே சர்ச்சையின் மூலம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க தலைவர்களுக்கு, பலர் பதிலடி கொடுத்தாலும், சம்மந்தப்பட்ட நடிகர் விஜய் மட்டும் படத்தில் பேசியதோடு சரி, நிஜத்தில் அக்கட்சிக்கு எந்தவித பதிலடியோ, கருத்தோ தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில், சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய், ‘மெர்சல்’ படத்தில் சர்ச்சையான வசனங்கள் பேசியது ஏன்? என்பதற்கான காரணத்தை மனம் திறந்து கூறினார்.
கமல் கையால் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை பெற்ற விஜய், “தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனா எனக்கு பெருமை.
சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்.
மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...