’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தின்று இப்படத்தின் டைடில் மற்றும் பஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டது. பைக்கில் ‘விவசாயி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பைக்கில் கார்த்தி உட்கார்ந்திருப்பது போன்ற பஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பட டைடிலுக்கு கீழே ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற சப் டைடிலும் போடப்பட்டுள்ளது.
சாயிஷா சாய்கல் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மெளனிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கும் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...