Latest News :

மீண்டும் இணையும் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி!
Monday January-15 2018

2009ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் எம்.சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ’நாடோடிகள்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.

 

மீண்டும் சமுத்திரகனி - எம்.சசிகுமார் வெற்றி கூட்டணி இணையவுள்ளது. நாடோடிகள் மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க சமுத்திரகனி இயக்கத்தில் எம்.சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் ’நாடோடிகள் 2’ திரைப்படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

 

இப்படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் - ஜாக்கி, படத்தொகுப்பு - ஏ.எல்.ரமேஷ்.

 

தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழுவினர், நாடோடிகள் படத்தை போன்றே நாடோடிகள் 2 படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி சிறந்த விருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

Related News

1775

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery