நடிகர் சூர்யா மற்றும் அவரது தம்பி நடிகர் கார்த்தி ஆகியோர் வெளி தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதைக் காட்டிலும், தங்கள் குடும்ப தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறார்கள்.
சூர்யா குடும்பத்தில் இருந்து வந்த முதல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பவராகும். ஸ்டுடியோ க்ரீன் என்ற நிறுவனம் சார்பில் சூர்யாவை வைத்து இவர் பல படங்கள் தயாரித்திருப்பதோடு, பிற நடிகர்களை வைத்தும் படங்கள் தயாரித்து வருகிறார். இதையடுத்து சூர்யா குடும்பத்தில் இருந்து எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் படம் தயாரிக்க தொடங்கியுள்ளார்கள்.
இந்த நிலையில், பிற நடிகர்களை வைத்து ஞானவேல்ராஜா தயாரித்த பல படங்கள் தோல்வியடைந்த நிலையில், அவர் பல கோடி கடனாளியாகிவிட்டாராம். இருந்தாலும், இந்த கடன் அனைத்தும் சூர்யா குடும்பம் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஞானவேல்ராஜாவை சூர்யா குடும்பத்தினர் விரட்டியடித்துவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.
என்னதான் ஞானவேல்ராஜா தயாரிப்பாளராக இருந்தாலும், சூர்யா குடும்பத்தார் சொல்படி தான், அவர் படங்களை தயாரித்து வந்தார். ஆனால், தற்போது சூர்யா குடும்பத்தினர் பேச்சை கேட்காமல், படங்கள் தயாரித்து கையை சுட்டுக்கொண்டவர், சூர்யா குடும்ப பெயரை கெடுக்கும் வகையில் சில விஷயங்களில் ஈடுபட்டு வருகிறாராம். இதனால் கடுப்பான சூர்யா மற்றும் கார்த்தி ஞானவேல்ராஜா தயாரிப்பில் நடிக்க போவதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.
சமீபத்தில் வெளியாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தாலும், அப்படம் கடனை ஈடுக்கட்டுவதற்காக சூர்யா நடித்துக்கொடுத்த படம் என்று கூறப்படுகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...