பிக் பாஸ் மூலம் பிரபலமாகியுள்ள ஒவியா, திரைப்படங்களில் நடிக்க கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இதனால், அவர் வீட்டி வாசல் வரை சென்றுவிட்ட தயாரிப்பாளர்கள் திரும்பிவிடுவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொங்கல் தினத்தன்று தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஓவியாவிடம், விஜய் அஜித் இவர்கள் இருவரின் படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தால் யார் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு, அவர் சற்றும் யோசிக்காமல் தளபதி என்று பதிலளித்தார்.
அஜித்தை ஓரம்கட்டிய ஓவியா, விஜயை தேர்வு செய்ததால், விஜய் ரசிகர்கள் ஓவியாவை பாராட்டியும், வாழ்த்தியும் மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் விருது நிகழ்ச்சி ஒன்றில், அஜித், விஜய் குறித்து பேசிய நயந்தாரா, அஜித் தான் எனது ஆல் டைம் பேவரைட் நடிகர், என்று கூறியது விஜய் ரசிகர்களை கடுப்பாக்கிய நிலையில், ஓவியாவின் ஸ்டேட்மெண்ட் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...