Latest News :

‘கபாலி’ இடத்தை பிடித்த ‘ஸ்கெட்ச்’!
Thursday January-18 2018

விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘ஸ்கெட்ச்’ மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக இருந்தாலும், படத்தில் மெசஜ் ஒன்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

 

திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால், திரையரங்கங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகம் மட்டும் இன்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

 

மலேசியாவில் கபாலி திரைப்படம் 72 திரையரங்கங்களில் திரையிடப்பட்டது. அதனை தொடர்ந்து ‘ஸ்கெட்ச்’ 61 திரையரங்கங்களில் திரையிடப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ‘ஸ்கெட்ச்’ வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் விக்ரம், இயக்குநர் விஜய் சந்தர், தயாரிப்பாளர்கள் தாணு, பார்த்தி, சீனு, நடிகர்கள் ஸ்ரீமன், வினோத், ஒளிப்பதிவாளர் சுகுமார், இசையமைப்பாளர் தமன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய தாணு, ”இந்த படத்திற்கு தற்போது பெரிய அளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. மலேசியாவில் கபாலி 72 சென்டர்களிலும், ஸ்கெட்ச் 71 சென்டர்களிலும் திரையிடப்பட்டிருக்கிறது. தஞ்சாவூரில் இந்த படம் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டது. தற்போது நான்கு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி” என்றார்.

 

நடிகர் விக்ரம் பேசுகையில், “கமர்சியலாக ஒரு படம் பண்ணவேண்டும் என்ற நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக்கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமா டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்துவிட்டது. இதுக்காக நான் சுகுமாருக்கு தான் தாங்ஸ் சொல்லணும். இந்த படத்துக்கு சுகுமார் பயங்கரமா வொர்க் பண்ணியிருக்கார். படத்தோட டோன் ரியலிஸ்டிக்காகவும், கமர்சியலாவும் இருக்குறதுக்கு அவர் தான் காரணம். அதவிட டைரக்டர் விஜய் இந்த கதையை பிரசண்ட் பண்ண ஸ்டைல் ரொம்ப புதுசா இருந்துச்சி. அவரோட காஸ்டிங் ஹண்ட்டிங்லேர்ந்து சின்ன சின்ன டீடெயில் வரைக்கும் அவரு எல்லாம் புதுசா இருக்கணும்னு நெனச்சி பண்ணார். அவரோட டயலாக், சென்ஸ் ஆஃப் ஹியூமர்,  பஞ்ச் டயலாக், ஸ்லாங், மியூசிக் சென்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். சூட்டிங் ஸ்பாட்ல நா கேட்டா கூட பஞ்ச் டயலாக்க உடனே சொல்வார். மாத்தி சொல்லுங்கன்னு சொன்னாக்கூட உடனே மாத்தி அத விட பவர்ஃபுல்லா சொல்வார். அவ்வளவு டேலண்ட் உள்ள கிரியேட்டர்.  இந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது. 

 

இந்த படம் ரிலீஸானப்புறம் தொடர்ந்து முப்பது நாப்பது தடவ படத்த ஆடியன்சோட பாத்துட்டு இருக்கார். ஆடியன்ஸ் ரசிக்கிறத இவர சந்தோஷமா ரசிச்சார். நா எப்படி 1999 டிசம்பர் 10 சேது ரிலீஸானப்போ ஒவ்வொரு தியேட்டருக்கா போயி ஆடியன்ஸ் என்ஜாய் பண்றத ரசிச்சோனே அதே மாதிரி இப்போ டைரக்டர் விஜய் ரசிச்சிட்டு இருக்கார். இந்த சந்தோஷம் எப்படியிருக்கும்னா ஒரு பொண்ண லவ் பண்றா மாதிரி இருக்கும். மனசுல சந்தோஷம் இருக்கும். தூக்கம் வராது. பசியிருக்காது. இந்த மாதிரி ஒரு வெற்றியை கொடுத்ததுக்காக டைரக்டர் விஜய் சந்தருக்கு நன்றி தெரிவிச்சுக்குறேன். 

 

இந்த படத்தோட ரிலீஸ தாணு சார் கையில் சென்றவுடன் நா சந்தோஷமாயிட்டேன். அவருக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராஜிடி அத்துப்படி. இந்த படத்தோட ப்ரொடியூஸர்ஸ் பார்த்தி அண்ட் சீனு, இவங்க டைரக்டருக்கு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. படத்துக்கு என்ன வேணும்னு கேட்டு கேட்டு செஞ்சாங்க. எல்லாரும் கேக்குறாங்க. ஏன் இப்படி ஒரு படம்னு? பட், இந்த படம் எப்படி கமர்சியலா சக்ஸஸ் ஆவும்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இப்போ கூட ஸ்கெட்ச்சுக்கு தியேட்டர் இன்கிரீஸ் ஆயிட்ருக்குன்னு நியுஸ் வந்துட்டேயிருக்கு. இத தான் தாணு சாரும் உங்ககிட்ட சொன்னார். நா கூட சத்யம்ல மேட்னி ஷோவுக்கு போனேன். எவ்வளவு கூட்டம். சத்யம்னாலே ரசிகர்கள் அமைதியா படத்த ரசிப்பாங்க. ஆனா ஸ்கெட்ச்சா கலாட்டாவா ஆடியன்ஸ் பாத்தப்போ எனக்கு சந்தோஷமாயிருந்தது.

 

இந்த படத்துக்கு தமன் சாரோட பேக்ரவுண்ட் ஸ்கோர் பிரமாதம். பல சீன எலிவேட் பண்றதே தமனோட பிஜிஎம் தான். உண்மையச் சொல்லணும்னா இந்த படத்துக்கு மியூசிக்கும் ஒரு கேரக்டரா ஆடியன்ஸ ரீச் பண்ணிச்சி. இதுக்காக தமனுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் இந்த படத்தோடஓபனிங்லேர்ந்து சாங்கோட லிரிக் வீடியோவ கிரியேட் பண்ணி வெளியிட்டு இந்த ஸ்கெட்ச் பத்தி ஹைப் கொடுத்த மகேசுக்கு நன்றி.

 

இந்த படத்துக்கு என்னோட ஃபேன்ஸ் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து. ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.” என்று தெரிவித்தார்.

 

வரும் 26 ஆம் தேதி தெலுங்கில் ‘ஸ்கெட்ச்’ வெளியாக உள்ளது. அங்கேயும் இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இந்தியிலும் இப்படத்தை ரீமேக் செய்ய கலைப்புலி எஸ்.தாணு திட்டமிட்டுள்ளாராம்.

Related News

1789

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery