Latest News :

செப்டம்பர் மாதம் வெளியாகும் ‘காதல் கசக்குதய்யா’
Thursday August-10 2017

‘அப்பா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காதல் கசக்குதய்யா’.

துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குநர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார் . துருவா இதற்கு முன் திலகர் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

 

வெண்பா, ’கற்றது தமிழ்’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ’அதே கண்கள்’  மற்றும் 'சேதுபதி ' படத்தில் மூர்த்தியாக நடித்த லிங்கா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் . ‘போடா போடி’,’நாய்கள் ஜாக்கிரதை’ படத்திற்கு இசையமைத்த தரண் இசையமைத்திருக்கிறார் . போடா போடி-யில் 'ஹரே ராம ஹரே கிருஷ்ணா ' என்ற பாடலுக்கு பின் இப்படத்தில் 'I am a Complan Boy' என்ற பாட்டை பாடியுள்ளார். 

 

சென்னையை சுற்றி படமாக்கப்பபட்ட இப்படம் 24 நாட்களில் அதிவேகமாக படமாக்கப்பட்டுள்ளது. பாலாஜி மோகன், கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி போன்ற இயக்குநர்களின் வரிசையில் துவாரக் ராஜாவும் குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.

 

இப்படம் குறித்து கூறிய இயக்குநர் துவாரக் ராஜா, “காதல் கசக்குதய்யா, அதன் தலைப்பிற்கேற்ற ஒரு குதூகலமான ரோம் காம் எண்டர்டெயினர் (Rom-Com Entertainer). மேலும் இது ஒரு கான்வேர்சேஷன் படம் (Conversational Film). 

 

முழுக்கதையையும் விஷுவலாக மட்டும் இல்லாமல் 'Catchy phrases' அல்லது நம்மூரில் 'பஞ்ச்' என்று சொல்லப்படும் வசனங்களின் வழியாகவே முழுப்படமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். ஆங்கிலத்தில் Before Sunrise, மற்றும் இயக்குநர் Woody Allen-ன் படங்கள் பிரதானமாக Conversational Film-மாக தான் இருக்கும் .சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் 'இது ஒரு வாயாடி படம்'. அதுமட்டுமில்லை பொதுவாக 'Why this Kolaveri di?' என்று காதலின் பெயரால் பெண்களை திட்டி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், காதலை குறித்து பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரிக்கிறது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.” என்றார்.

 

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியால் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related News

179

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery