சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்து படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார் இப்படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார். அப்பாடல் வரிகள் “சாராய மண்டைய மண்டைய
குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க வாடா மச்சான்“ இப்பாடலில் சசிரேகா என்ற நடிகையுடன் இமான் அண்ணாச்சி நடனமாடி கலக்கியிருக்கிறார்.
நகைச்சுவை வேடங்களில் நடித்த அண்ணாச்சி முதல் முறையாக நடனமாடியிருக்கிறார். அந்நடனத்தை பார்த்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் இனிமேல் நடனப்புயல் பிரபுதேவாவும், ராகவா லாரன்சும் இமான் அண்ணாச்சியிடம் நடனம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசிக்கொண்டார்கள்.
இதைபற்றி இமான் அவர்கள் கூறும்பொழுது எனக்குள் இப்படி ஒரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்துகொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குனர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டிபோட முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.இப்பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் கும்கி, கயல், ஆர்யா-2, பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த NOBLE என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் இசை பாலமுரளி பாலு ஆவார். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...