ரசிகர்கள் வேண்டாம், என்று அஜித் கூறினாலும், அவரது படங்களில் சிறப்பான ஓபனிங் இருப்பதை அனைவரும் அறிவர். அந்த அளவுக்கு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார் அஜித்.
இதற்கிடையே, அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ பெரிய அளவில் தோல்வியை தழுவினாலும், வசூலில் சாதனை படைத்தது. இருந்தாலும், படத்தின் பட்ஜெட் பெரியது என்பதால் வசூல் பெரிதும் அடிப்பட்டது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’ பல திரையரங்குகளில் விவேகம் வசூலை முந்தியுள்ளது. அஜித்தின் படத்தின் வசூலை சிவகார்த்திகேயனின் படம் முந்தியிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மேலும், விஜயின் ‘பைரவா’, அஜித்தின் ‘விவேகம்’ ஆகிய படங்களின் வசூலை வேலைக்காரன் விரைவில் முறியத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...