தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரெஜினா காசண்ட்ரா, தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துவிட்டார். இருந்தாலும், தமிழில் தனக்கான இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் ரொம்பவே மும்முரம் காட்டி வருகிறார். அதற்காக, சம்பளத்தை குறைத்துக் கொண்டவர், கவர்ச்சியாக நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
’சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘பார்ட்டி’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்து வரும் ரெஜினா போதைக்கு அடிமையாகிவிட்டதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதுவும் ஒரு படத்திற்காக தான்.
ஆம், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகி வரும் ‘அவே’ என்ற தெலுங்குப் படத்தில் போதைக்கு அடிமையான பெண் வேடத்தில் ரெஜினா நடித்து வருகிறாராம். இதில் காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மூன்று இளம் பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பேசும் இந்த படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று ரெஜினா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...