பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் ‘காளிதாஸ்’ போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து நடிகர் கார்த்தி வெளியிட்டார்.
சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனைகளுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் & இயக்குனர்
சிவநேசன் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில் அவர்களின் புதிய முயற்ச்சியாக நடிகர் பரத் அவர்களின் முற்றிலும் புதிய தோற்றதில் இன்வெஸ்ட்சிகேசன் திரில்லராக ‘காளிதாஸ்’ திரைப்படம் பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.
விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீசினிவாசன் எடிட்டிங் செய்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார்.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...