கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக்கொணடிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதாநாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த 'தாவளம்' படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
இப்படத்தை தொடர்ந்து ‘மதுரை டூ தேனி - வழி ஆண்டிப்பட்டி’ படக்குழுவினரின் இரண்டாம் படமான ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அனுஷா அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாளத்தில் பகத்ஃபாசில் நடித்த 'அன்னயும் ரசூலும்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தவருக்கு, தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் நடனத்தில் கவனத்தை செலுத்தினார்.
பரதம், குச்சுப்புடி ஆகிய நடனங்களில் தேர்ச்சி பெற்று மேடை நடனத்தில் கவனம் செலுத்தி வந்தவருக்கு பிரபல மலையாள இயக்குநர் ராஜீவ் ரவியிடமிருந்து மீண்டும் நடிக்க அழைப்பு வர மேடை நடனத்துடன் சினிமாவிலும் கவனம் செலுத்த தயாராகி விட்டார் அனுஷா நாயர். சினிமாவில் தன் நிஜப் பெயரிலேயே புகழ் பெற விரும்பும் அனுஷா நாயருக்கு தன்னை கதாநாயகியாக்கிய தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமாக வேண்டும் என்பதே ஆசை.
தன்னால் எவ்வளவு சவாலான கதாபாத்திரமானாலும் அதை ஏற்று நடித்து பெயர் வாங்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு காத்திருக்கும் அனுஷா நாயர், “நடனமும் நடிப்பும் எனக்கு இரு கண்கள் மட்டுமல்ல, உயிரும் கூட” என்கிறார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...