Latest News :

10 நடிகர்களை தாண்டி ‘நிமிர்’ நாயகனான உதயநிதி!
Friday January-19 2018

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ’நிமிர்’. பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

 

இப்படத்திற்கு வசனம் எழுதி முக்கிய வேடம் ஒன்றில் நடித்துள்ள சமுத்திரக்கனி தான் இப்படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்விலும் பிரியதர்ஷனுக்கு உதவியாக இருந்தாராம். அதாவது 10 நடிகர்கள் பெயரை அவர் பிரியதர்ஷனிடம் பரிந்துரைத்தாராம். ஆனால், அந்த 10 பேரையும் நிராகரித்த பிரியதர்ஷன், உதயநிதியை தேர்வு செய்தாராம்.

 

இது குறித்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய சமுத்திரக்கனி, “இந்த படத்துக்கு 10 நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார். அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார். பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார்.” என்றார்.

 

உதயநிதி பேசும் போது, “படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், நிமிர் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை. தெறி படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரகனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் எனக்கு ரொம்ப ஆதரவாக இருந்தார். நான் நடித்த படங்களிலேயே மிகவும் அழகான  காட்சியமைப்புகள் இந்த படத்தில் தான். கருணாகரனுக்கும் எனக்கும் தான் நடிப்பில் போட்டி. எம்எஸ் பாஸ்கர் இயக்குனர் போதும் என்றாலும் ஒன் மோர் கேட்பவர். யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரகனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன்.” என்றார். 

 

இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “இது தமிழில் என்னுடைய 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.

Related News

1802

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery