Latest News :

வேலு பிரபாகரனின் ‘கடவுள் 2’ தொடங்கியது
Friday January-19 2018

தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய திரைப்படங்களில் ஒன்று ‘கடவுள்’. வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவான இப்படம் பல தடைகளை கடந்து, பல காட்சிகளை கட் செய்தும் வெளியானது. நாத்திகம் பேசும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கடவுள் 2’ என்ற தலைப்பில் வேலு பிரபாகரன் எடுக்கிறார்.

 

பிளாக் மூன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜே.கே ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் வேலு பிரபாகரன், அஜய், செலம் ஆர்.ஆர்.தமிழ்செல்வன், கடவுள் கண்ணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் எழுதி வேலு பிரபாகரன் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்க, கலையை கிருஷ்ணா நிர்மாணிக்கிறார். செலிதாஸ் இணை இயக்கத்தை கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

 

இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னை ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாடலாசிரியர் சினேகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

Related News

1803

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery