சினிமாவில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து மறைமுகமாக தகவல்கள் கசிந்துவந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் தங்களது அனுபவத்தை வெளிப்படையாக பேசுகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று அனைத்து மொழி திரையுலகிலும் அவ்வபோது சில நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று பேட்டிகளில் கூறி வருகிறார்கள். நடிகர்கள், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல துறையைச் சேர்ந்தவர்கள் இந்த பட்டியலில் இருந்தாலும், அவர்களது பெயரை மட்டும் எந்த நடிகையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த நிலையில், பிரபல கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் பங்கேற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ”என்னை தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார், ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன்பு இதுபோன்ற கசப்பான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன், ஆனால், இந்த சம்பவத்திற்கு பிறகு நான் தமிழ் சினிமாவில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...