‘ஸ்கெட்’ படத்தை தொடர்ந்து விக்ரமின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வரும் விக்ரம், வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க, ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார்.
இந்த தகவலை கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திரு.விக்ரம், செல்வி.அக்ஷரா ஹாசன், இயக்குநர் ராஜேஷ் M செல்வா மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணையும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள். புதிதாய்த் துவங்கவிருக்கும் நம் திரைப்படம் வெற்றிகாண விழைவோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 20, 2018
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...