திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் ஜெகன், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், வாலிபர் ஒருவரது மரணத்திற்கு ஜெகன் காரணமாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை ஜெகன் வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்திருக்கிறார். அப்போது வந்தவாசி அருகே அவருடைய கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் ஹுசைன் என்ற இளைஞர் படுகாயமடைந்தார். செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...