Latest News :

நடிகர் செளந்தரராஜா - தமன்னா திருமணம்!
Saturday January-20 2018

’சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா. சுந்தரபாண்டியன் படத்திற்குப்பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, தங்கரதம், தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஈடிலி , கடைக்குட்டி சிங்கம் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

 

நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளை. 

 

’க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் இளம் பிஸினெஸ் உமன், தமன்னாவை திருமணம் செய்ய இருக்கிறார், சௌந்தரராஜா. 

 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு செளந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. மே மாதம் மதுரை, உசிலம்பட்டியில் சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது.

Related News

1812

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery