Latest News :

நிக்கி கல்ராணியுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது - ’கீ’ பட விழாவில் ஜீவா பேச்சு!
Saturday January-20 2018

ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கீ’. மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் காலிஷ் இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜீவா, “படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார். அருமையான கதையைக் கொண்ட இத்திரைப்படம் தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமையும். தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பனுக்கும் மற்றும் இயக்குநர் காலீஷ் அவர்களுக்கும் நன்றிகள்.” என்றார்.

 

இயக்குநர் காலீஷ் பேசுகையில், “இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி. பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே முன் வரல. ஒரு அறைக்குள் அடைந்துகிடந்தேன். இறுதியா மைக்கல் சார் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு. ஜிவா, நிக்கி கல்ராணி மற்றும் அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர்கள் எங்களை போல இளம் இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து உதவுங்கள்.” என்றார்.

 

நிக்கில் கல்ராணி பேசும் போது, “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கும், காலீஷ் அவர்களுக்கும் நன்றி. ஜிவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது. சமூகத்திற்கு நல்ல கருத்தை தரும் படமாக அமையும். தற்போது சமூகத்தில் பெண்கள் இருக்கும் ஓர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விஷால் சூப்பரா மியுசிக் போட்டுக்காரு." என்றார்.

 

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசுகையில், “இப்படத்தில் இசையமைக்க என்னை பரிந்துரை செய்த ஆர்.ஜே.பாலாஜி அவவர்களுக்கு நன்றி. வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி. பாட்டு எல்லாமே அருமையாக வந்துள்ளது. உங்க அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் அமையும். பாடல்களை அழகாகக எழுதிய தாமரை, கார்கி, அமுதவன், சுபு ஆகியோர்க்கு என் நன்றிகள்." என்றார்.

 

நடிகை சுஹாசினி பேசுகையில், “38 வருடங்களுக்கு முன்பு படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படபடப்பு இருந்ததோ அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது. பழைய காலங்களில்  பெரியவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டோம். தற்போது காலீஷ் போன்ற அறிமுக இயக்குநர்களான சிறியவர்களிடம் கற்றுக்கொள்கிறோம். படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும் போது, “சுகாசினியும் நானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்ள். இந்த படம் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது, தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு நல்லக் கருத்தை தரும் படமாக அமையும். ப்ளூ வேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்வதால் ஏற்ப்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது. இசையமைப்பாளர்,  இயக்குநர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்." என்றார்.

 

இயக்குநர் கே.வி.ஆனந்த் பேசுகையில், “இசை வெளியீட்டு விழாவிற்க்கு என்னை அழைத்ததற்க்கு நன்றி.ஜிவா திறைமையுள்ள நடிகர், விஜய் சேதுபதியும் அப்படித்தான்.ஜிவா பிஞ்சிலேயே பழுத்தவர்.விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவவர். பாடல்களும் காட்ச்சியமைப்பும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.தைரியமாக படத்தை தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபி நந்தன் மிகச் சிறப்பான வேலையை செய்துள்ளார்.” என்றார்.

Related News

1815

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery