விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மட்டும் இன்றி, அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ரசிகர்களிடம் பிரபலமாகிவிடுகிறார்கள். ரசிகர்களின் பிரபலமாகும் இவர்கள் வெள்ளித்திரையிலும் ஜொலிப்பதால், நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியில் சேர பல இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த வகையில், விஜய் டிவி யில் சில ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 5 பகுதிகளை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளினி பாவனா, ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானாவர்.
இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியின் 6 வது பகுதி விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்த 6 சீசனை பாவனா தொகுத்து வழங்கப்போவதில்லை. கடந்த 6 வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிய பாவனா, தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு குட்பை சொல்லியுள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாவனா, “இசை பாரம்பரியத்தைச் சேர்ந்த தனக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த 6 வருடங்களாக ஐந்து சீஸன்களில் தொடர்ந்து பங்கு பெற்றது மகிழ்ச்சியான விஷயம். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கிடைத்தது பெறும் பேறு என நினைக்கிறேன். என் மீது அன்பைப் பொழிந்த அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள். விரைவில் தொடங்க இருக்கும் சூப்பர் சிங்கர் 6 சீசனில் நான் பங்கேற்கவில்லை. என்னுடைய ஆதரவும் எப்போதும் அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் ஏன் சூப்பர் சிங்கர் சீஸன் 6 பங்கேற்கவில்லை என்பதற்கான காரணத்தை மட்டும் தெரிவிக்காததால், ரசிகர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
Thank you for everything 🙏😊Good luck for #supersinger6 👍 @vijaytelevision @pradeepmilroy @ravoofa @makapa_anand @Priyanka2804 @arrahman pic.twitter.com/oKUfAVQISp
— Bhavna Balakrishnan (@Bhavna__B) January 20, 2018
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...