Latest News :

நாங்க தான் ஃபஸ்ட்! - மார்தட்டிக் கொள்ளும் விக்ரம் பிரபுவின் ‘பக்கா’
Monday January-22 2018

வருடத்திற்கு ஐந்து படங்களில் நடித்துவிடும் விக்ரம் பிரபு, பல்வேறு வித்தியாசமான வேடங்களிலும் நடித்து வருகிறார். அதன்படி அவரது நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பக்கா’. நிக்கி கல்ராணி, பிந்து மாதவி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கும் இப்படத்தில் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி, முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

 

’அதிபர்’ படத்தை தயாரித்த பென் கன்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்திருக்கிறார்.

 

எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்க, யுகபாரதி, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். கதிர் கலையை நிர்மாணிக்க, கல்யாண், தினேஷ் ஆகியோர் நடனம் அமைத்துள்ளனர். மிராக்கிள் மைக்கேல் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, சசிகுமார் எடிட்டிங் செய்துள்ளார். தயாரிபு நிர்வாகத்தை செந்தில்குமார் கவனிக்க, இணை தயாரிப்பை பி.சரவணன் கவனித்துள்ளார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் எஸ்.எஸ்.சூர்யா, படம் குறித்து பேசுகையில், “முழு நீள  காமெடி படமாக உருவாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை ஒரு காட்சியிலோ அல்லது ஒரு பாடல் காட்சியிலோ திருவிழாவை பார்த்திருபோம். ஆனால் நாங்கள் ஒரு திருவிழாவையே படமாக எடுத்திருக்கிறோம்.

 

இன்டீரியல்  காட்சிகள் ( சுவற்றிற்குள் )  இல்லாமல் படம் முழுக்க எக்ஸ்டீரியல் என்று சொல்லப்படும் வெளிப் புறங்களிலேயே படமாக்கப் பட்ட முதல் படம் இந்த பக்கா. 

 

கள்ளக்குறிச்சி அருகில் உள்ள செம்படாப் குறிச்சி என்ற ஊரில் ஒரிஜினல் திருவிழாவே நடத்தி இசையமைப்பாளர் சத்யாவை அழைத்துச் சென்று இரவு முழுக்க அவரை பார்க்க வைத்து ஒரு கரகாட்ட சாங்கை கம்போஸ் பண்ணினோம். அந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பேசப்படும் பாடலாக நிச்சயம் இருக்கும்.

 

குற்றாலம் பக்கத்தில் ஒரு ஆற்றில் 1000 பேரை வைத்து ஆற்று  திருவிழாவில்  ஒரு வித்தியாசமான காட்சிகளை தத்ரூபமாக படமாக்கினோம்.  படம் விரைவில் வெளியாக உள்ளது.” என்றார்.

Related News

1830

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery