Latest News :

ஹீரோவாகும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் - ஹீரோயின் யார் தெரியுமா?
Tuesday January-23 2018

கடந்த சில காலங்களில் சென்னையில் பல பகுதிகளில் புதிய கிளைகளை திறந்து வரும் சரவணா ஸ்டோர்ஸ் நிருவனம், நிறுவன விளம்பரங்களில் புதிய மாடல் ஒருவரை களம் இறக்கியும் வருகிறது. அவர் வேறு யாருமல்ல, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவண அருள் என்பவர் தான்.

 

ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் தோன்றி அவர் வசனம் பேச தொடங்கி தற்போது நடனம் ஆடுவதை வரை வந்துவிட்டார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற மலேசிய நட்சத்திர கலை நிகழ்ச்சியில் பங்கேற்று கோடி கணக்கில் நடிகர் சங்கத்திற்கு நன்கொடை வழங்கியர், விரைவில் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆக உள்ளார்.

 

ஆம், சரவண அருள் விரைவில் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதற்காக, பலரிடம் கதை கேட்டு வரும் அவர், உதவி இயக்குநர் ஒருவர் சொன்ன கதையை தேர்வு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே அவர் விளையாட்டாக தான் ஹீரோவானால் ஜோடியாக நயந்தாராவை போடுவேன், என்று கூறியிருந்தார். அதுவே தற்போது நிஜமாகிவிடும் போலிருக்கிறது. அருள் தரப்பில் இருந்து நயந்தாராவிடம் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

 

முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும் நோ ரொமான்ஸ், நோ கிளாம்ஸ் என்ற கண்டிஷன்களை போட்டிருக்கும் நயந்தாராவுக்கு எத்தனை கோடிகளை கொட்டி கொடுத்தாலும் பரவாயில்லை அவரை ஹீரோயினாக்கிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சரவண அருள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஆனால், நயந்தாரா இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அருளுடன் விளம்பர படங்களில் நடித்த ஹன்சிகா, தமன்னா இருவரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்ற மற்றொரு ஐடியாவும் அருளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

 

எது எப்படியோ, ரஜினி, கமல் சினிமாவில் விட்டுச் செல்லும் இடத்தை நிரப்புவதில் அண்ணாச்சி தீவிரமாக இருக்கிறார் என்பது உறுதி.

Related News

1837

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery