Latest News :

’பாகுபலி’ படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிக்கும் ‘பிரமாண்ட நாயகன்’
Thursday August-10 2017

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன்,  அனுஷ்கா,  பிரக்யாஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம்  அகிலாண்டகோடி 'பிரமாண்ட நாயகன்.' ராமா என்ற வேங்கடசபெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை  மையமாகக்கொண்டது.

 

ஜனரஞ்சகமாக இன்றைய நவீன காலத்திற்கேற்ப மிகச்சிறந்த தொழில் நுட்பத்தைப்  பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் எனலாம்.    

 

இப்படத்தை  இயக்கியுள்ளவர் சுமார் 60 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளவரும்  'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ்.

 

பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாகவைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

 

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்ற சௌரப்ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

 

'பாகுபலி'க்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். 

 

பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு, திருமலை உருவான விதம், ஆனந்த நிலையம் என பெயர் வரக்காரணம்,  வேங்கடம் என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம்,  ராமா என்பவர்   ஹாத்திராம் பாபாவாக மாறியது எப்படி, பாலாஜி என்று பெயர் வரக்காரணம்,  திருமலையில் முதலில் யாரை வணங்குவது என பக்தர்கள் மனதில் எழும்  பல சந்தேக வினாக்களுக்கு ஏற்ற  விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக்காட்சிகளாக  அமைத்து தெளிவு படுத்தியுள்ளனர்.

 

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படம். விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

வசனம் பாடல்களை டி.எஸ்.பாலகன் எழுத ஜெ.கே.பாரவி கதை எழுத கோபால்ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

 

பிரபல பின்னணிப் பாடகர்கள்  உன்னி கிருஷ்ணன் , எஸ்.பி.பி. சரண் , டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம்  , வி.வி. பிரசன்னா , ஜானகி ஐயர் , முகேஷ் , ஹேமாம்பிகா . பிரியா , ராஜேஷ் , கவிதா கோபி எனப் பலரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

 

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

 

தமிழகத் திரைகளில் இந்தப் ' பிரமாண்ட நாயகன் '  காட்சி அமைப்பின் விஸ்வரூப தரிசனம் தரும்  விதத்தில்

வெளியாகவுள்ளது.

 

பெருமாளுக்கு உகந்த  புரட்டாசி மாதத்தில் உலகமெங்கும் திரையிட இப்படத்தை  ஜோஷிகா பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும்  தயாரிப்பாளர்கள்   எஸ்.துரைமுருகனும், பி.நாகராஜனும்  திட்டமிட்டுள்ளனர்.

Related News

184

’மை லார்ட்’ மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது! - மகிழ்ச்சியில் சசிகுமார்
Thursday February-19 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது   சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...

முதல் பார்வையை வெளியிட்ட ’அச்சுத அவதாரம்’ படக்குழு!
Thursday February-19 2026

நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...

’ஹாட் ஸ்பாட் 2’ இயக்குநருக்கு கிடைத்த வெற்றி பரிசு!
Thursday February-19 2026

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...

Recent Gallery