காயவிடும் இயக்குநர், கடுப்பேற்றும் தயாரிப்பாளர் - நூடுல்ஸாகும் விக்ரம்!
Wednesday January-24 2018

கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக்கொள்ளும் விக்ரம், ஒரு படத்திற்காக இரண்டு மூன்று ஆண்டுகளை செலவிடுவார். ஆனால், அந்த படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால் அவரது உழைப்பும் வீணாகிவிடும். இதனால் கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியவர் ஒரே ஆண்டில் மூன்று படங்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்.

 

அதன்படி, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், இடையே ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து அப்படமும் வெளியாகிவிட்டது. மேலும், கமல் தயாரிப்பில் ஒரு படம், வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு படம் என்று இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமும் போட்டுவிட்டார். ஆனால், இன்னமும் ‘துருவ நட்சத்திரம்’ படம் முடிந்தபாடில்லை.

 

முழு கதை இல்லாததால் இயக்குநர் கெளதம் மேனன் படத்தில் நடிப்பதை சூர்யா தவிர்த்து வந்த நிலையில், தான் விக்ரம் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். தற்போது விக்ரமையும் அவர் காயவைத்துவிட்டாராம்.

 

க்ளைமாக்ஸை எப்படி எடுப்பது என்று தெரியாமல் கெளதம் மேனன் ஒரு பக்கம் முழித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தயாரிப்பு தரப்பு பணம் இல்லாமல் கையை சொறிந்துக்கொண்டிருக்கிறதாம். இந்த இரண்டு காரணங்களால் துருவ நட்சத்திரம் இன்னும் முடியாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

துருவ நட்சத்திரத்தை முடித்துவிட்டு தனது அடுத்த படங்களின் பணியில் ஈடுபட விக்ரம் தீவிரம் காட்டினாலும், க்ளைமாஸ் தெரியாத கெளதம் மேனன் மற்றும் பணம் இல்லாத தயாரிப்பு நிறுவனத்தால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமல் நொந்து நூடுல்ஸாகி கொண்டிருக்கிறாராம்.

Related News

1845

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery