அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியா முழுவதும் வரவேற்பு பெற்ற இப்படம் வசூலில் பல படங்களில் சாதனைகளை முறியடித்தது. இதையடுத்து, மீண்டும் விஜயை வைத்து அட்லி படம் இயக்குவதாகவும், அப்படம் ‘மெர்சல் 2’ ஆக இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடித்து வரும் விஜய், அப்படம் முடிந்த பிறகு அட்லி இயக்கத்தில் நடிப்பார், என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், விஜயின் 63 வது படத்தை இயக்கும் பட்டியலில் அட்லி கழட்டிவிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்த வினோத் விஜயின் 63 வது படத்தை இயக்குவார், என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், மோகன் ராஜாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
எது எப்படியோ, விஜயின் 63 வது படத்தில் அட்லி இல்லை என்ற தகவல் விஜய் வட்டாரத்தில் இருந்து கசிந்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...