அரசியல் செல்வாக்கோடு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி, இன்று ஹீரோவாகவும் வலம் வருகிறார். ஆரம்பத்தில் அவர் நடித்த ஒரு சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றாலும், சமீப காலங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதால், அவரது படங்கள் எடுபடாமல் போய்விட்டது.
இதனால், ரூட்டை மாற்றிக் கொண்ட உதயநிதி காமெடியை தவிர்த்துவிட்டு ஆக்ஷன் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த சில படங்களும் தோல்வியை தழுவிட்டது. இதனால், உதயநிதி என்றாலே ஒரே மாதிரியான காமெடி ஃபார்முலா தான், என்று ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டதால், தற்போது கோடம்பாக்கத்தில் மார்க்கெட் இல்லாத ஹீரோக்கள் பட்டியலில் அவரும் சேர்ந்துவிட்டார்.
அதளபாதளத்திற்கு சென்ற தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்துவதற்காக, எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் உதயநிதி, அதற்காகவே பிரியதர்ஷனுடன் கைகோர்த்துள்ளார். இருந்தாலும், அதில் அவரை ஒரு கதாபாத்திரமாக மட்டுமே பிரியதர்ஷன் பயன்படுத்தியிருக்கிறாராம்.
எப்படி பயன்படுத்தினால் என்ன, தான் நடித்த படம் ஹிட் ஆனால் போதும், என்ற மனநிலையில் இருக்கும் உதயநிதியின் மார்க்கெட்டை ’நிமிர்’ நிமிர்த்துமா? என்பது நாளை மறுநாள் தெரிந்துவிடும்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...