தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள அனுஷ்காவின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதையடுத்து கமர்ஷியல் ஹீரோயின் என்பதை தாண்டி, சிறந்த நடிகை என்று அனுஷ்கா பெயர் வாங்கியுள்ளார்.
தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘பாகுமதி’ நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதன் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அனுஷ்கா, பாலியல் பிரச்சினை குறித்து பேசியுள்ளார்.
”பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்க வேண்டும்” என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...