‘நான் ஈ’, ‘ஆஹா கல்யாணம்’, ‘வெப்பம்’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் நானி, தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். அவர் நடிக்கும் தெலுங்குப் படங்கள் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் நானி நேற்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் நானியின் முகம் மற்றும் மூக்கில் அடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள நானி, அங்கொன்றும் இங்கொன்றும் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் மீண்டும் நடிக்க தொடங்கிவிடுவேன், என்று தெரிவித்துள்ளார்.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...