நடிகர் சங்கத்தின் கட்டிடம் கட்டி முடித்த பிறகே கல்யாணம் செய்துக் கொள்வேன் என்ற வைராக்கியத்தில் இருக்கும் விஷால், பல்வேறு வகையில் நிதி திரட்டுவதுடன், கார்த்தியுடன் இணைந்து படம் ஒன்றிலும் நடிக்கும் பணியை மேற்கொண்டார். பிரபு தேவா இயக்கும் இப்படத்திற்கு ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று தலைப்பு வைத்து, அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சியோடு அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே படம் தொடங்கிய மூன்றே நாட்களில், சொல்லாமல் கொள்ளாமல், மும்பை பறந்த பிரபு தேவா, அங்கிருந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்கு, “படம் டிராப்” என்று மெசஜ் அனுப்பியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த ஐசரி அவரிடமே விவரத்தை கேட்டுவிட்டு இன்னும் அதிகமாகவே அதிர்ச்சியடைந்தாராம். காரணம், கார்த்திக்கு தெரியாமல் விஷாலும், விஷாலுக்கு தெரியாமல் கார்த்தியும், பிரபுதேவாவை தொடர்பு கொண்டு, என் கதாபாத்திரத்தை எப்படி டிசன் பண்ணீயிருக்கீங்க, ஒன்னு விடாமல் சொல்லுங்க, என்று நச்சரித்துவிட்டார்களாம்.
இயக்குநர் நினைத்தபடி உருவாகும் படங்கள் தான் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமையும், இப்படி தங்களுக்காக காட்சிகள் இருக்க வேண்டும் என்று விரும்பும் நடிகர்களுக்காக எடுக்கப்படும் படங்கள், அட்டர் பிளாப்பாகிவிடும், என்பதில் மாஸ்டர் உரிதியாக இருப்பதால், எடுத்து பிளாப் ஆவதை விட, எடுக்காமல் விட்டுவிடுவதே நல்லது, என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...