கடந்த 2009 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதுல் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சமுத்திரக்கனி - சசிகுமார் மீண்டும் இணைந்துள்ளார்கள்.
‘நாடோடிகள் 2’ என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயண், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகம்பரம் ஒளிப்பதிவு செய்ய ஜாக்கி கலையை நிர்மாணிக்கிறார். ரமேஷ் எடிட்டிங் செய்ய, யுகபாரதி பாடல்கள் எழுதிகிறார். திலீப் சுப்பராயண் சண்டைக் காட்சிகளை வடிவமைக்க, தினேஷ், ஜானி ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். மக்கள் தொடர்பை மெளனம் ரவி கவனிக்க, தயாரிப்பு மேற்பார்வையை சிவசந்திரன் கவனிக்கிறார்.
மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது பிற நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...