விஷாலுக்கு நாமம் போட்ட மேனஜர் - சோகத்தில் வி.எப்.எப்!
Saturday January-27 2018

நடிப்பில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் அதிரடி காட்டி வரும் விஷால், சினிமாவில் மட்டும் இன்றி சினிமா சங்கங்களிலும் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இதனால், அவரது படங்கள் வெளியாவதில் காலதாமதம் ஆனாலும், அவர் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதற்காகவே, வெளி தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்காமல், தனது நிறுவனத்தின் தயாரிப்பில் மட்டுமே விஷால் நடித்து வருகிறார்.

 

படங்கள் வெளியாவதில் ஏற்படும் காலதாமதத்தால் பொருளாதார ரீதியாக சில இழப்புக்களை சந்தித்தாலும், நடிகர் சங்க கட்டிடம், தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பைரசியை தடுப்பது என்று விஷால் பிறர் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஆர்.கே.நகர் தேர்தலிலும் போட்டியிட முயன்று அது முடியாமல் போனதால், வரும் சட்டமன்ற தேர்தலில் விஷால் போட்டியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இப்படி, தனது வேலையை தவிர்த்துவிட்டு பிறர் வேலைகளில் ஈடுபாடு காட்டி வரும் விஷால், தனது திரைப்பட வியாபாரங்களை தனது மேனஜர் முருகராஜ் என்பவரிடம் ஒப்படைத்திருந்தார். விஷாலுக்கு பர்ஷனல் மேனஜர் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாகவும் செயல்பட்டு வந்த இந்த முருகராஜ், விஷாலிடம் இருந்து ரூ.18 கோடியை சுருட்டி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சினிமா சங்கங்கள், அரசியல் ஈடுபாடு, அறக்கட்டளை மூலம் ஏழை எளியோருக்கு உதவி செய்தல் போன்றவற்றோடு நடிப்பையும் கவனித்து வந்த விஷால், தனது நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை நம்பிக்கை பேரில் முருகராஜியிடம் ஒப்படைந்திருந்தாராம். விஷாலின் நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவரது மேனஜர் முருகராஜ், பல ஆண்டுகளாக விஷாலுக்கு தெரியாமல் பணத்தை சுருட்டி வந்துள்ளார். இதுவரை அவர் விஷாலிடம் இருந்து சுமார் 18 கோடி அடித்திருப்பதாக கூறப்படுகிறது.

 

சமீபத்தில், மேனஜரின் இந்த தில்லாலங்கடி திருட்டி வேலைப் பற்றி கண்டுபிடித்த விஷால், அவரை கண்டித்து வெளியே அனுப்பிவிட்டாராம். ஏற்கனவே சொந்த படம் தயாரிப்பால் பல கோடி கடனாளியாக இருக்கும் விஷால், தனது மேனஜரிடம் 18 கோடியை பறிக்கொடுத்துவிட்டு சோகத்தில் இருக்கிறாராம். அவரது சோகம் அவரது நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியையே (வி.எப்.எப்) பெரும் சோகத்தில் தள்ளியுள்ளதாம்.

Related News

1863

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery