ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘சத்ரு’. கதிர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ‘ராட்டினம்’ படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்க, கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பிரசன்னா ஜி.கே எடிட்டிங்கை கவனிக்க, ராஜமோகன் கலையை நிர்மாணிக்கிறார். சண்டைக்காட்சிகளை விக்கி வடிவமைக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் நவீன் நஞ்சுண்டானிடம், படம் குறித்து கேட்டதற்கு, “இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். 24 மணீ நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படம்.” என்றார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் கெளதம் மேனன் சமீபத்தில் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...