சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்ததோடு, தொடர்ந்து வெற்றிப் படங்களையும் கொடுத்து வருகிறார்.
இதற்கிடையே, சிவகார்த்திகேயன் படத்திற்கு தொடர்ந்து கிடைத்து வரும் ஓபனிங்கை பார்த்து முன்னணி நடிகர்கள் பலர் புருவத்தை உயர்த்திய நிலையில், ‘வேலைக்காரன்’ படத்தின் வசூல் ரிப்போர்ட் அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி மற்றும் கமல் ஆகியோரது படங்களுக்குப் பிறகு விஜய், அஜித் ஆகியோரது படங்களுக்கு மட்டுமே சிறப்பான ஓபனிங் இருக்கும். இவர்களுக்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் படங்கள் சிறப்பான ஓபனிங்கை பெற்று வந்த நிலையில், தற்போது அஜித், விஜய் படங்களின் வசூலையே ‘வேலைக்காரன்’ மிஞ்சிவிட்டது.
இப்படம் உலகம் முழுவதும் ரூ.86 கோடி வசூல் செய்துள்ள ‘வேலைக்காரன்’ தமிழகத்தில் ரூ 58 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ’சிங்கம்-3’ வசூலை வேலைக்காரன் முறியடித்துள்ளது. மேலும், விஜய், அஜித் ஆகியோரது படங்களின் வசூலையும் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், வேலைக்காரன் இன்னும் தெலுங்கில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...